அமமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் – சசிகலாவின் நிலைப்பாட்டினை அறிய தொண்டர்கள் ஆர்வம்!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலையொட்டி  அமமுக தனது கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தினை வரும் 25ம் தேதி நடத்தவுள்ளதாக  டிடிவி தினகரன் தெரிவித்துளார். சசிகலா சிறையிலிருந்து வந்த பிறகு நடை பெறவுள்ள முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அமமுக கட்சி:

வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி ஆலோசனை நடத்துவதற்கென அமமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர். டிடிவி தினகரன் அறிவித்துளார். அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் “இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மாவின் நல்லாட்சியினை தமிழகத்திற்கு வழங்குவதற்கென போராடி வரும் நமது கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கழக துணை தலைவர் திரு.S.அன்பழகன் அவர்களின் தலைமையில் வருகிற 25.02.2021 அன்று காலை 9.00 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.

புதுச்சேரியில் கவிழ்ந்த காங்கிரஸ் ஆட்சி – முதல்வர் நாராயணசாமி ராஜினாமா!!

மேலும் அவர் “மொத்தமாக 10 இடங்களை இணைத்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடக்கவிருக்கும் இந்த கூட்டத்திற்கு கழக உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழோடு தங்களது பகுதிகளிலிருந்து காணொலி மூலமாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று 4 ஆண்டுகால சிறை தண்டனைக்கு பிறகு தற்போது ரிலீசாகி சென்னையில் இளவரசி வீட்டில் ஓய்வெடுத்து வரும் சசிகலா இக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் ரிலீசான பிறகு நடக்கும் முதல் கட்சி பொதுக்குழு கூட்டம் என்பதால் கட்சி உறுப்பினர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இரண்டு தொகுதிகளில் தான் போட்டியிடப்போவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ள நிலையில் சசிகலாவின் நிலைப்பாடு குறித்து எதுவும் தெரியவில்லை. இப்பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா கலந்து கொள்ளும் பட்சத்தில் அதற்கான விடை கிடைக்கும் என தொண்டர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here