40 வயது இயக்குனரை காதலிக்கும் பிரபல நடிகை அனு இம்மானுவேல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

நடிகை அனு இம்மானுவேல் பிரபல தெலுங்கு பட உலகின் இயக்குனரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 23 வயதே ஆன நடிகை அனு இம்மானுவேல் காதலிக்கும் இயக்குனருக்கு வயது 40 என தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

நடிகை அனு இம்மானுவேல்

மலையாளத்தில் வெளியான ‘ஆக்சன் ஹீரோ பிஜு’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகுக்குள் பிரவேசித்தார் நடிகை அனு இம்மானுவேல். பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியுடன் நடித்திருந்த இந்த திரைப்படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத்தந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து ‘மஞ்சு’, ‘ஆக்சிஜன்’, ‘நா பேரு சூர்யா’, ‘கீதா கோவிந்தம்’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் அனு இம்மானுவேல். கடந்த 2019ம் ஆண்டு வெளியான ‘எங்கள் வீட்டு பிள்ளை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் இவர். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்திருந்தார் அனு இம்மானுவேல்.

தொடர்ந்து நடிகர் விஷாலுடன் ‘துப்பறிவாளன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் அனு இம்மானுவேல். தெலுங்கு படவுலகில் முன்னனி நடிகையாக இருக்கும் நடிகை அனு இம்மானுவேல் இயக்குனர் ஒருவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

#INDvsENG பகலிரவு டெஸ்ட் – வெற்றியை தொடருமா இந்திய அணி??

தெலுங்கு பட உலகின் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அவர்களின் மூத்த மகனான ஜோதி கிருஷ்ணா என்பவரை அனு இம்மானுவேல் காதலிக்கிறாராம். 2017ம் ஆண்டு வெளியான ‘ஆக்சிஜன்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அனு இம்மானுவேல். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவுக்கும் நடிகை அனு இம்மானுவேலுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

தற்போது இருவரும் டேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருந்தாலும் 23 வயது அனு இம்மானுவேல் 40 வயதான இயக்குனரை காதலிப்பது கொஞ்சம் ஓவர் தான் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here