புதுச்சேரியில் கவிழ்ந்த காங்கிரஸ் ஆட்சி – முதல்வர் நாராயணசாமி ராஜினாமா!!

0

தற்போது புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன் முடிவில் காங்கிரஸ் கட்சி வாக்கெடுப்பில் குறைவாக வாக்குகளை பெற்றுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். இதனால் முதலமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு அரசியல் சூழ்நிலைகள் மிக பரபரப்பாக இருந்து வருகிறது. மேலும் ஆளும் கட்சி எம்எல்ஏ களும் சிலர் பதவி விளகினர். இதனால் முதல்வர் நாராயணசாமிக்கு பிரச்சனைகள் எழுந்தது. தற்போது இதனை தொடர்ந்து, புதுச்சேரி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முதல்வர் கோரிக்கை வைத்தார். மேலும் பேசிய அவர், புதுச்சேரியை மத்திய அரசு வஞ்சித்துள்ளது. மேலும் பல மாநிலங்களில் 41 சதவீதம் வரியை கொடுத்த மத்திய அரசு புதுச்சேரிக்கு மட்டும் 21 சதவீதம் தான் கொடுத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எங்கள் அரசு பல பிரச்சனைகளை கடந்து மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்கி வருகிறோம். இதனால் மக்கள் எங்கள் மீது பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தற்போது எங்களது ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கின்றனர். மாநில பட்ஜெட் அறிவித்த திட்டங்களை 95 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம் என்றும் அவர் கூறினார். தற்போது அவர் கூறியது போலவே புதுச்சேரியில் நம்பிக்கை வகிடுப்பு நடத்தப்பட்டது.

#INDvsENG பகலிரவு டெஸ்ட் – வெற்றியை தொடருமா இந்திய அணி??

தற்போது இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. இதனை சபாநாயகர் அறிவித்தார். தற்போது புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துள்ளது. இதனால் முதலமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக புதிய ஆட்சி வர வாய்ப்புள்ளது. இதனால் தற்போது அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here