#NZvsAUS டி 20 – 184 ரன்களை குவித்த நியூஸிலாந்து அணி!!

0

தற்போது நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணி தங்களது டி 20 போட்டிகளை விளையாடி வருகின்றனர். இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 184 ரன்களை குவித்துள்ளது.

நியூஸிலாந்து vs ஆஸ்திரேலியா:

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி தற்போது தங்களது டி 20 தொடர்களை விளையாடி வருகின்றனர். இதில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூஸிலாந்து அணி தரப்பில் துவக்க ஆட்டக்காரர் கப்டில் 0 ஏமாற்றினார். கேப்டன் வில்லியம்சன் 12 இவரும் ஏமாற்ற நியூஸிலாந்து அணி திணறியது. அதன்பின்பு கான்வே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

#TnvsAP விஜய் ஹசாரே கோப்பை – தமிழ்நாடு அணி 176க்கு ஆல் அவுட்!!

ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிந்தாலும் மறு பக்கத்தில் இவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இவரது விக்கெட்டை எடுக்க ஆஸ்திரேலிய அணியினர் திணறி வந்தனர். தற்போது 20 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 184 ரன்களை குவித்தது. கான்வே 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தற்போது 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் வேட் மற்றும் பின்ச் களமிறங்கியுள்ளனர். பின்ச் 1, பிலிப் 2 ரன்கள் ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். தற்போது களத்தில் மார்ஷ் மற்றும் வேட் விளையாடி வருகின்றனர்.

லைவ் ஸ்கோர்:

ஆஸ்திரேலியா – 9/2

வேட் – 5*
மார்ஸ் – 0*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here