‘கொரோனா தடுப்பூசி போடும் பணியின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும்’ – மத்திய அரசு வலியுறுத்தல்!!

0
covishield
covishield

கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துமாறு நாட்டின் அனைத்து மாநில அரசுக்களுக்கும் மற்றும் யூனியன் பிரேதேசங்களுக்கும் மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. கடிதத்தின் மூலமாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பப்பட்ட இந்த ஆணையை ஏற்று விரைந்து செயல்படுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரியில் துவங்கப்பட்டது. முதற்கட்டமாக சுமார் மூன்று கோடி சுகாதார மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டதை தொடர்ந்து தற்போது 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கப்படவுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

97% கொரோனாவுடன் போராடும் pfizer தடுப்பு மருந்து – சோதனை அமைச்சகம்!!

அதில் அவர், “கொரோனா தடுப்பூசி போடப்படும் வேகம் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். சுகாதார மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு இன்னும் முழுமையாக தடுப்பூசி போட்டு முடிக்கப்படவில்லை. எனவே குறைந்தது வாரத்தில் நான்கு நாட்களாவது தடுப்பூசி போடப்படவேண்டும். அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுவதால் அதற்கு தயாராகும் வண்ணம் தடுப்பூசி வழங்கும் பணி விரைவு படுத்தப்படவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97% உயர்வு – சுகாதாரத்துறை தகவல்!!

மேலும் அவர், “50 வயதுக்கு மேற்பட்டோருக்கு அடுத்த மாதம் முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. எனவே அடுத்த மாதம் முதல் தேதி முதலே அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது சுகாதார மையங்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் ஆகியன தயாராக இருக்கவேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் கேரள சுகாதாரத்துறை செயலர் சைலஜா மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில் அவர் “கொரோனா தடுப்பூசி முதல்முறை வழங்கப்பட்ட போது அதனை போட்டுக்கொள்ளாத முன்கள மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு இரண்டாம் முறையின் போது வாய்ப்பளிக்கப்படவேண்டும். கேரளாவில் 50 வயதுக்கு மேற்பட்டோர் அதிகமிருப்பதால் மத்திய அரசு வழங்கும் கொரோனா தடுப்பூசியின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் – நாளை தாக்கல்!!

இதை தொடர்ந்து கோவி ஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வரும் சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் ” கோவி ஷீல்டு மருந்துக்காக காத்திருக்கும் அனைத்து நாடுகளுக்கும் எனது வேண்டுகோள் ஒன்று உள்ளது. இந்தியாவில் தடுப்பூசிக்கான தேவை மிக அதிக அளவில் உள்ளதால் நாங்கள் இந்தியாவின் தேவைக்கே முன்னுரிமை கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளோம். எனவே அதன் அடிப்படையிலேயே நாங்கள் நாடுகளுக்கு தடுப்பூசியினை வழங்க முடியும். எனவே தடுப்பூசியை எதிர்பார்த்து காத்திருக்கும் நாடுகள் சற்று பொறுமை காக்க வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here