97% கொரோனாவுடன் போராடும் pfizer தடுப்பு மருந்து – சோதனை அமைச்சகம்!!

0

கொரோனவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு தடுப்பு மருந்துகளுக்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் pfizer தடுப்பு மருந்து கொரோனாவை கட்டுப்படுத்த வல்லது என இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து

உலகமெங்கிலும் பரவி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, உலக நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டிருந்தன. இந்த வகையில் உலகம் முழுவதும் சுமார் 212 தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில் 48 மருந்துகள் சோதனையில் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் அவசரகால பயன்பாட்டாக பல்வேறு தடுப்பு மருந்துகள், சில நாடுகளில் பயன்பாட்டிகள் உள்ளன. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த pfizer தடுப்பு மருந்து கொரோனாவுக்கு எதிராக 95.8% போராடக்கூடிய வல்லமை உடையது என இஸ்ரேல் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு – இன்று முதல் அமல்!!

மேலும் கடுமையான பாதிப்பு உள்ள நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு pfizer தடுப்பு மருந்து 99.2 சதவீதம் உதவி செய்கிறது எனவும், 98.9 சதவீதம் கொரோனா உயிழப்பைக் கட்டுப்படுத்துகிறது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. pfizer தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நோயாளிகளின் பரிசோதனையின் முடிவில் பாதுகாப்பானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த pfizer தடுப்பு மருந்து அமெரிக்காவின் பார்மா நிறுவனமான pfizer உடன் ஜெர்மனி பார்மா நிறுவனம் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here