இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97% உயர்வு – சுகாதாரத்துறை தகவல்!!

0

தற்போது இந்தியாவில் உள்ள கொரோனா பாதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் கொரோனா என்னும் கொடிய வைரஸ் மக்களை ஆட்டி படைத்து வருகிறது. தற்போது தான் கொரோனாவின் வேகம் சற்று குறைந்து வருகிறது. இருந்தும் எந்த உலக நாடும் கொரோனாவில் இருந்து முழுவதுமாக மீளவில்லை என்பது தான் உண்மை. தற்போது இந்தியாவில் கொரோனவிற்கான தடுப்பூசிகளை போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவிலுள்ள கொரோனா பாதிப்பு பற்றிய தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 14,199 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 1,10,05,850 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 83 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,56,385 ஆக உயர்ந்தது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவில் இருந்து 9,695 பேர் குணமடைந்துள்ளனர்.

அரசியலில் களமிறங்கும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி!!

இதன்மூலம் தற்போது மொத்தமாக 1,06,99,410 பேர் குணமாகியுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது மருத்துவமனையில் கொரோனாவிற்காக 1,50,055 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் குணமடைந்தவர்களின் சதவீதம் 97.22 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உயிர் இழந்தவர்களின் சதவீதம் 1.42 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் 1.36 ஆக குறைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here