தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் – நாளை தாக்கல்!!

0

தற்போது தமிழகத்தில் 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நாளை தமிழகத்தின் துணை முதலமைச்சர் பன்னிர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். தற்போது இது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இடைக்கால பட்ஜெட்:

கொரோனா காலத்திற்கு பின்பு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 2ம் தேதி கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இதனை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது உடையுடன் துவக்கினார். மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் அனைவரும் அவரது உரையை வெளிநடப்பு செய்தனர். தற்போது தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்யவுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்காக நாளை காலை மீண்டும் சட்டசபையில் கூட்டத்தொடர் கூடுகிறது. மேலும் நாளை 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழகத்தின் துணை முதலமைச்சர் பன்னிர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். மேலும் பட்ஜெட் படித்து முடித்ததும் அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். பின்பு அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதங்களை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்று ஆலோசனை நடத்தப்படும்.

சட்டப்பேரவை கூட்டம்:

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னிர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், துணை தலைவர் துறை முருகன் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்க படுகிறது. அதுமட்டுமல்லாமல் விரைவில் தேர்தல் வரவிருப்பதால் இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல திட்டங்கள் இடம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

மேலும் இந்த கூட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த கருத்துக்களை எதிர்க்கட்சிகள் விவாதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பட்ஜெட் மீதான விவாதம் முடிந்ததும் இந்த கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் நாளை மாலை 5.30 மணிக்கு சட்டப்பேரவையில் வ.உ.சிதம்பரம், ஓ.பி.ராமசாமி ரெட்டியார் மற்றும் ப.சுப்பராயன் ஆகியோரின் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் முதல்வர், துணை முதல்வர், நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், எதிர் கட்சி தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here