சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு – இன்று முதல் அமல்!!

0

சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலுக்கான பயணிகள் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

மெட்ரோ ரயில் கட்டணம்

சென்னையில் இரண்டு வழித்தடங்கள் வழியாக 54 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்படுகிறது மெட்ரோ ரயில் சேவை. தினசரியாக 1 லட்சத்து 13 ஆயிரம் வரை மக்கள் கொரோனா ஊரடங்கிற்கு முன்பாக மெட்ரோ ரயிலில் பயணித்து வந்தார்கள். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி முதல் இந்த ரயில் சேவை மீண்டுமாக துவங்கியது. கொரோனா ஊரங்கிற்கு பின் 80 ஆயிரம் பயணிகள் வரை பயணித்து வந்தனர். இந்த ரயில் சேவைக்கான பயணிகள் கட்டணம் 70 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டண விலையை குறைக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அரசியலில் களமிறங்கும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி!!

இந்நிலையில் கடந்த வாரம் தமிழகம் முதல்வர் பழனிச்சாமி மெட்ரோ ரயிலுக்கான கட்டண விலையை குறைத்து உத்தரவிட்டார். இதன்படி அதிகபட்ச கட்டணமாக இருந்த 70 ரூபாயிலிருந்து குறைந்த பட்ச கட்டணமாக 50 ரூபாய் என அறிவிக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்தது. தொடர்ந்து பயண அட்டைகள் மூலம் டிக்கெட் பெரும் பயணிகளுக்கு 10 சதவீதமும், ஃகியூ ஆர் கோர்டு மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் பயணிகளுக்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here