பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களை குறி வைக்கும் கொரோனா – கேரளாவில் தீவிர கண்கணிப்பு!!

0

நீண்ட பொதுமுடக்கத்திற்கு பிறகு நாடு முழுவதும் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் கேரளாவில் 192 மாணவர்கள் மற்றும் 72 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிகளில் கொரோனா:

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பல மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது கல்வி நிலையங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பரில் முதற்கட்டமாக திறக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பினால் மீண்டும் மூடப்பட்டன.

 

பாகுபலி பிரபாஸுக்கு விரைவில் டும் டும் டும் – பொண்ணு யாரு தெரியுமா??

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக கடந்த டிசம்பர் முதல் திறக்கப்பட்ட பள்ளிகள் ஷிப்ட் முறையில் இயங்கி வருகின்றன. பிற மாநிலங்களை போல கேரளாவிலும் பள்ளிகள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது மலப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவில், 192 ஆசிரியர்கள் மற்றும் 72 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாவட்ட சுகாதார துறை திங்களன்று தெரிவித்துள்ளது. மேலும் பிற மாணவர்களும் ஆசிரியர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here