பாகுபலி பிரபாஸுக்கு விரைவில் டும் டும் டும் – பொண்ணு யாரு தெரியுமா??

0

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பரபரப்பாக படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வரும் பிரபாஸ் விரைவில் திருமண வாழ்வில் அடியெடுத்துவைக்க போவதாக வெளியாகியுள்ள தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருமணம்:

பிரபல தெலுங்கு நடிகரான பிரபாஸ் ராஜ மௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட நடிகரானார் பல்வேறு மொழிகளிலும் டப் செய்யப்பட்ட இந்த படம் வெற்றிகரமாக ஓடி அவருக்கு டோலிவுட்டில் முன்னணி கதாநாயகன் என்ற அந்தஸ்தை பெற்று தந்தது. தொடர்ந்து வெளியான அப்படத்தின் இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றியடைந்தது. தொடர்ந்து அவர் ராதேஷ்யம், சலார், அதிபுர்ஷ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

விவசாயிகள் போராட்டத்தால் சாலை போக்குவரத்தில் கட்டுப்பாடு – டெல்லி காவல்துறை அறிவிப்பு!!

இந்நிலையில் தற்போது பிரபாஸின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் விரைவில் தொழிலதிபர் ஒருவரின் மகளை திருமணம் செய்து கொள்ளப்போவதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து இதுவரை பிரபாஸ் தரப்பிலிருந்து எந்த விதமான அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. முன்னதாக அவர் பிரபல நடிகையான அனுஷ்காவை திருமணம் செய்யபோவதாக வதந்திகள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here