தொடர் வீழ்ச்சியை காணும் தங்கத்தின் விலை – மகிழ்ச்சி வெள்ளத்தில் நகைப்பிரியர்கள்!!

0

தற்போது சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று மாலை நிலவரப்படி ஆபரணதங்கத்தின் விலை மேலும் அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்:

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்து அனைவரையும் அச்சத்துக்கு தள்ளியது தங்கத்தின் விலை. ஆனால் நாளுக்கு நாள் தற்போது தங்கத்தின் அதிரடியாக குறைந்து வருகிறது. ஆண்டு தொடக்கத்தில் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்த நகைப்பிரியர்கள் தற்போது நகை வாங்க குஷியோடு கிளம்பி வருகின்றனர். சுபநிகழ்ச்சிகள் அதிகம் இந்த மாதத்தில் நடைபெறவிருப்பதால் தங்கம் அதிகமாக வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாகுபலி பிரபாஸுக்கு விரைவில் டும் டும் டும் – பொண்ணு யாரு தெரியுமா??

சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது. இதனால் தற்போது ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ. 35,720 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூ.4 குறைந்து தற்போது 1 கிராம் ரூ.4,465 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் குறைந்து தற்போது ரூ.73.10 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளி தற்போது ரூ.73,100 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here