இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் – தமிழக அரசு அதிரடி!!

0

சொத்து குவிப்பு வழக்கில் கைதான இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான  சில சொத்துக்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியாளரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சொத்துக்கள் முடக்கம்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன், சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா தனது நான்கு ஆண்டு தண்டனை காலம் முடித்து கடந்த 27ம் தேதி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு மனுவின் அடிப்படையில் நேற்று இந்த வழக்குக்கு இறுதி முடிவு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னை மாவட்ட வருவாய்க்கு சொந்தமான இளவரசியின் 6 சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மீண்டும் ஒத்திவைக்கப்படும் மாநிலங்களவை கூட்டம் – வெங்கையா நாயுடு உத்தரவு!!

சென்னை டிடிகே சாலை ஸ்ரீராம் நகரில் உள்ள சொத்து, வாலஸ் தோட்டத்தில் உள்ள 5 சொத்துக்கள் உட்பட அனைத்தும் தமிழக அரசின் சொத்துக்கள் என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் தமிழக அரசுக்கே சொந்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இளவரசிக்கு சொந்தமான செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் ஊத்துக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள சொத்துக்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here