விவசாயிகள் போராட்டத்தால் சாலை போக்குவரத்தில் கட்டுப்பாடு – டெல்லி காவல்துறை அறிவிப்பு!!

0

டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் காரணமாக அங்கு போக்குவரத்து மாற்றமும், போக்குவரத்து கட்டுப்பாடுகளும் தெடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவதாக டெல்லி போக்குவரத்துதுறை காவல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து சிக்கல்:

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து 76வது நாளாக போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் டெல்லியின் எல்லை பகுதிகள் மற்றும் முக்கியமான பல பகுதிகளை ஆக்கிரமித்துள்ளனர். ஆயிரக்கணக்கான வாகனங்களுடன் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருவதையொட்டி டெல்லி மாநகர் மற்றும் அதன் எல்லைப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உருவாகியது. இதனை சரி செய்யும் பொருட்டு போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களை செய்தது டெல்லி காவல் துறையின் போக்குவரத்து பிரிவு.

#INDvsENG சென்னை டெஸ்ட் – அஸ்வின் சூழலில் சிக்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்! 5 விக்கெட் இழப்பு!!

அதன்படி நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. வழிகள் திருப்பி விடப்பட்டன. போராட்டம் நடக்கும் இடத்தினை தவிர்க்கும் பொருட்டு கால அட்டவணைகள் மாற்றம், வழித்தடம் மாற்றம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து தகவல் தெரிவித்த அதிகாரிகள் “தொடர்ந்து நடந்து வரும் போராட்டம் காரணமாக டெல்லியின் சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் ஆகிய பகுதிகளில் தற்போதும் போக்குவரத்து பதிக்கப்பட்டுள்ளது. நொய்டாவிலிருந்து டெல்லிக்கு வரும் முக்கியமான பகுதியான கேரேஜ் வே முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் டெல்லியிலிருந்து நொய்டா செல்லும் கேரேஜ் வே வழக்கம் போல செயல்படுகிறது என கூறியுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

காசிப்பூர் எல்லை மூடப்பட்டுள்ளதால், மோட்டார் வாகன பயணிகளுக்கு மாற்று வழியை போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி டெல்லி-நொய்டா-டெல்லி ஃப்ளைவே, கர்காரி மோட் மற்றும் ஷஹாத்ரா வழியாக காசியாபாத்தை அடையும் வழியை தற்போது பயணிகள் உபயோகப்படுத்தி வருகின்றனர். மேலும் முகர்பா மற்றும் GTK சாலையிலிருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து ஹரியானாவிலிருந்து டெல்லிக்கு வரும் சாலையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து அவுட்டர் ரிங் ரோடு, GTK ரோடு மற்றும் NH 44 ஆகியவற்றை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ள போக்குவரத்து துறை டெல்லி குர்கான் மற்றும் டெல்லி ஃபரிதாபாத் சாலைகளில் உள்ள எல்லைப்பகுதிகளை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here