#INDvsENG சென்னை டெஸ்ட் – அஸ்வின் சூழலில் சிக்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்! 5 விக்கெட் இழப்பு!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது தங்களது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் அபாரமாக பந்து வீசி வருகிறார். இவரது பந்துவீச்சினால் தற்போது இங்கிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து போராடி வருகிறது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது தங்களது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலாவதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 578 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ரூட் 218, பர்ன்ஸ் 87 மற்றும் ஸ்டோக்ஸ் 82 ரன்களை குவித்தனர். இந்தியா தரப்பில் அஸ்வின் மற்றும் பும்ராஹ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்பின்பு தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்தியா அணிக்கு பேட்டிங் சரியான முறையில் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி ரன்களை சேர்க்க திணறி வந்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா அணி 337 ரன்களுக்கு தனது ஆட்டத்தை இழந்தது. இந்தியா அணி தரப்பில் அதிகபட்சமாக பாண்ட் 91 மற்றும் சுந்தர் 85 ரன்களை குவித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பெஸ் 4 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

திணறும் இங்கிலாந்து:

முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா அணி 241 ரன்கள் பின்தங்கி இருந்தது. அதன்பின்பு தற்போது இங்கிலாந்து அணி தனது இரண்டவது இன்னிங்ஸை துவக்கியது. தொடக்கத்திலையே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது இன்னிங்சின் முதல் ஓவரை அஸ்வின் வீச வந்தார். முதல் ஓவரின் முதல் பந்திலையே பர்ன்ஸ் விக்கெட்டை அஸ்வின் எடுத்து அசத்தினார்.

இணையத்தில் வெளியான மாஸ்டர் டெலீட் சீன்ஸ் – கௌரி கிஷனை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

பின்பு இங்கிலாந்து அணியினர் அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறி வருகின்றனர். 101 ரன்கள் எடுத்து 5 விக்கெட்களை இழந்து திணறி வருகிறது இங்கிலாந்து அணி. இந்தியா தரப்பில் அசத்தலாக பந்து வீசிய அஸ்வின் 3 பும்ராஹ் மற்றும் இஷாந்த் 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். தற்போது களத்தில் போப் மற்றும் பட்லர் விளையாடி வருகின்றனர்.

லைவ் ஸ்கோர்:

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ் – 119/5

போப் – 18*
பட்லர் – 14*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here