அப்படி போடு.., ரஜினியின் ’படையப்பா’ திரைப்படம்  ரீ-ரிலீஸ்.. கில்லி வசூலை மிஞ்சுமா ??

0

தற்போதைய  சினிமாவில் சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் வாரணம் ஆயிரம், மயக்கம் என்ன மற்றும் கில்லி படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பாபா படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகர் ரஜினியின் மற்றொரு சூப்பர் ஹிட்  திரைப்படம் மறுஒளிபரப்புக்கு தயாராகி வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உயிர்த்தெழும் டெங்கு காய்ச்சல்.. 3 நாளில் 30 பேர் பாதிப்பு.. நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!!

அதாவது ரஜினி, நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் எதார்த்த நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தை தமிழகம் முழுவதும் விரைவில் ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here