அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்கு இடைக்கால தடை.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0
அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்கு இடைக்கால தடை.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் அரவிந்த கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை, கெஜ்ரிவால் தரப்பினர் தாக்கல் செய்து இருந்தனர். அதனை விசாரணை செய்த நீதிமன்றம் அவருக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கியதை நாம் அறிவோம். இது தொடர்பான வழக்கு,  விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது, இதன் காரணமாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமினுக்கு இடைக்கால தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதை அடுத்து சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெளியே வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஜாமீன் உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here