Home செய்திகள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை.. தமிழக வெற்றிக் கழகம்  அறிவிப்பு!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை.. தமிழக வெற்றிக் கழகம்  அறிவிப்பு!!

0
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை.. தமிழக வெற்றிக் கழகம்  அறிவிப்பு!!

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி, உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் வாக்கு எண்ணிக்கை 13ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த இடைத்தேர்தல் தொடர்பாக  தமிழக வெற்றிக் கழகம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை, போட்டியிடவும் இல்லை என அறிவித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் தான் எங்கள் இலக்கு, இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட எதிலும் தவெக போட்டியிடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

வாட்ஸ்அப் பயனர்களே.., பயன்பாட்டுக்கு வரும் புதிய அம்சம்.., இனி கவலை வேண்டாம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here