சமூக வலைதள செயலிகள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான புது புது அப்டேட்களை, அவ்வப்போது வெளியிட்ட வண்ணம் உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களை வியக்க வைக்கும் வகையில் புது புது அப்டேட்களை வழங்கிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி வாட்ஸ் அப் வீடியோ காலில் 32 பேர் வரை இணையும் புது அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் இனிமேல் 32 பேர் வரை குழுவாக வீடியோ காலில் பேச முடியும். அத்துடன் வீடியோ காலில் யார் பேசுகிறாரோ அவரின் காணொலி முதலில் வரும் வகையில் புதிய வசதியையும் செய்துள்ளது. தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.