இணையத்தில் வெளியான மாஸ்டர் டெலீட் சீன்ஸ் – கௌரி கிஷனை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

0

மாஸ்டர் படத்தில் ஹீரோ விஜய் உட்பட அனைவரையும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வரும் நெட்டிசன்களிடம் தற்போது சிக்கி இருப்பவர் கௌரி கிஷன். தற்போது மீம்ஸ் கிரியேட்டர்கள் சோசியல் மீடியாவில், மாளவிகா மோஹனன், சாந்தனு வரிசையில் கௌரியையும் வெச்சு செய்து வருகின்றனர்.

நெட்டிசன்களின் மீம்ஸ்:

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் மாஸ்டர். இதன் வசூல் ஒருசில நாட்களிலேயே 200 கோடியை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அப்படம் அமேஸோன் பிரைமில் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் deleted scenes தற்போது ott தளங்களில் வெளியாகியுள்ளது.

அலெக்ஸாவிடம் 19,000 முறை “ஐ லவ் யூ” சொல்லும் இந்தியர்கள் – ஆய்வில் சுவாரஸ்ய தகவல்!!

அவற்றில் நடித்த நடிகர் நடிகைகளை தற்போது மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் போட்டு கேலி செய்து வருகின்றனர். இதில் ஹீரோ விஜய், ஹீரோயின் மாளவிகா முதல் ஒரு காட்சிக்கு வந்து செல்லும் நடிகர்கள் வரை அனைவருக்கும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். சாந்தனு, தீனாவையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இந்த வரிசையில் தற்போது சிக்கியிருப்பவர் நடிகை கௌரி கிஷன்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

படத்தின் மிக முக்கிய கதாபாத்திரமான இவர், முக்கியமான ஒரு காட்சியில் சொதப்பியுள்ளதால் அந்த காட்சியையே இயக்குனர் தூக்கி விட்டதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பிட்ட அந்த காட்சியில் கௌரியிடம் தவறாக நடந்து கொண்ட இருவரை விஜய் அடிப்பார் அப்போது கோபமடைந்த அந்த இருவரில் ஒருவன் “ஆமாம் நான்தான் அப்படி நடந்தேன், இதோ இவன்தான் அதை வீடியோ எடுத்தான்” என்று கூறுவார்.

மிகவும் எமோஷனலான இந்த காட்சியில் அனைவரும் காட்சியோடு ஒன்றி நடித்திருக்க கௌரி மட்டும் சிரித்துக்கொண்டிருப்பார்.  தற்போது வெளியிடப்பட்ட காட்சிகளிலிருந்து இது தெளிவாக தெரிகிறது. “எப்படிப்பட்ட காட்சியை இப்படி சிரிச்சு சொதப்பியிருக்கியேம்மா?” என்று அவரை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here