அலெக்ஸாவிடம் 19,000 முறை “ஐ லவ் யூ” சொல்லும் இந்தியர்கள் – ஆய்வில் சுவாரஸ்ய தகவல்!!

0

இந்தியர்கள் சராசரியாக அமேசான் அலெக்ஸாவிடம் “ஐ லவ் யூ” என்ற வாக்கியத்தை 19,000 முறை கூறுகின்றனர் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த 2020 ஆம் ஆண்டிற்கானது என்றும் கூறப்பட்டுள்ளது.

அமேசானின் அலெக்ஸா

முன்னணி நிறுவனமான அமேசான் புதிய கண்டுபிடிப்பாக அலெக்ஸா என்பதனை கண்டுபிடித்து தங்களது இணையத்தளத்தில் விற்பனை செய்தனர். இந்த தயாரிப்பின் சிறப்பு நாம் கூறும் விஷயங்களை புரிந்து கொண்டு தேவையான தகவல்களை வழங்குவதே ஆகும். இதில் நாம் விரும்பிய பாடல்களை கூட கேட்கலாம்.

#INDvsENG டெஸ்ட் – முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த அஸ்வின்!!

இன்று சந்தையில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் ஒரு ஸ்மார்ட் கேட்ஜெட் என்று கூறினால் அது, அலெக்ஸா. குறிப்பாக இந்த அலெக்ஸா அமேசான் நிறுவனத்தின் பிரத்தேயேகமான தயாரிப்பு ஆகும். இந்த தயாரிப்பிற்கான கிராக்கி சந்தையில் அதிகரித்ததால் பல முன்னணி நிறுவனங்கள் இதனை தயாரித்து விற்பனை செய்கிறது. தற்போது இந்த அலெக்ஸா பல இந்திய மொழிகளிலும் பேசி வருகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இது குறித்த சுவாரஸ்ய தகவல் ஒரு ஆய்வின் மூலம் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இந்தியர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டில் அலெக்ஸாவுடன் பேசியதை விட இந்த ஆண்டு அதிகமாக பேசியுள்ளனர். 2019 ஆம் ஆண்டை விட 67 சதவீதம் இது அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஒரு நாளைக்கு இந்தியர்கள் அலெக்ஸாவிடம் 19,000 முறை “ஐ லவ் யூ” என்ற வாக்கியத்தை கூறி உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here