‘விவசாயிகளை மறுபடியும் பேச்சு வார்த்தைக்கு அழைத்த மோடி – நாடாளுமன்றத்தில் உரை!!

0

நாடாளுமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் கூட்டத்தில் பேசிய மோடி, ‘மீண்டுமாக விவசாயிகளை பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறேன் என்றும் குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்றும் என அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அறிவிப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் அரசுடனான பேச்சு வார்த்தைக்கு விவசாயிகள் மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தில், பிரதமர் மோடி விவசாயிகளுடன் பேசுவதற்கு தயார் என கூறியுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்வி நேரத்திற்கு பிறகு பேசிய பிரதமர் மோடி, ‘ஒவ்வொரு சீக்கியரை பற்றியும் இந்த நாடு பெருமை கொள்கிறது. அவர்கள் இந்த நாட்டிற்காக எவ்வளவு செய்துள்ளார்கள்? நாம் அவர்களுக்கு எத்தகைய அளவு மரியாதை அளித்தாலும் அது அவர்களுக்கு குறைவாக தான் காணப்படும். என் வாழ்நாட்களில் அதிக நாட்களை நான் பஞ்சாபில் தான் கழித்தேன். அதனால் நான் ஒரு அதிர்ஷ்டசாலி. விவசாயிகளை சிலர் தவறான வழியில் நடத்த முயற்சிக்கிறார்கள். அது நிச்சயமாக பயனளிக்காது’ என கூறினார்.

அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து பேசிய அவர் ‘மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாய சங்கங்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். அதனால் எந்த பதற்றமும் தேவை இல்லை. விவசாயிகளை மீண்டுமாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறேன். ஆனால் யாராவது ஒருவர் ஒருபடி மேலே வர வேண்டும். இந்த உலகம் நிலையானது இல்லை. எதிர்காலத்தில் ஒரு சிறப்பான ஆலோசனை வந்தால் அதை பற்றி அரசு தீவிரமாக சிந்திக்கும். குறைந்த பட்ச ஆதார விலையும் மலிவான ரேஷன் வழங்கும் திட்டமும் தொடர்ந்து நடைபெறும்’ என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here