#INDvsENG டெஸ்ட் தொடர் – அஸ்வின் சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி!! 178 ரன்னுக்கு ஆல் அவுட்!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது தங்களது இரண்டாவது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இதில் இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் சூழலில் இங்கிலாந்து சிக்கியது. தற்போது தனது இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 178 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா அணிக்கு 420 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது தங்களது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ரூட் 218 ரன்களை குவித்தார். இந்தியா அணி தரப்பில் அஸ்வின் மற்றும் பும்ராஹ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். அதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்தியா அணி படுமோசமாக விளையாடியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா அணி 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா அணி தரப்பில் அதிகபட்சமாக பாண்ட் 91 ரன்களை குவித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பெஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா அணி 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தனர். பின்பு இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது.

இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் – தமிழக அரசு அதிரடி!!

இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணிக்கு மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அஸ்வின் சூழலில் இங்கிலாந்து அணி சிக்கி தவித்தது. அஸ்வின் பந்துவீச்சை எதிகொள்ள முடியாமல் இங்கிலாந்து அணியினர் தங்களது விக்கெட்டை இழந்து வந்தனர். இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 178 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரூட் 40 ரன் அடித்துள்ளார். இந்தியா அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய அஸ்வின் 6 விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். தற்போது இந்தியா அணிக்கு இங்கிலாந்து அணி 420 ரன்களை இலக்காக வைத்துள்ளது. தற்போது இண்டை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியுள்ளது. களத்தில் ரோஹித் மற்றும் கில் விளையாடி வருகிறார்கள்.

லைவ் ஸ்கோர்:

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் – 578
இந்தியா முதல் இன்னிங்ஸ் – 337
இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ் – 178
இந்தியாவிற்கு இலக்கு – 420 ரன்கள்

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் – 4/0

ரோஹித் – 0*
கில் – 4*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here