Friday, April 26, 2024

ரஜினியின் புதிய கட்சி குறித்த அறிவிப்பு எப்போது?? ஆவலில் ரசிகர்கள்!!!

Must Read

தமிழக அரசியலில் தற்போது விறுவிறுப்பான திருப்பங்கள் உருவாகி உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சியின் பெயர், சின்னம் மற்றும் முதல்வர் வேட்பாளரை அடுத்த ஆண்டு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் சூழல்:

தமிழகத்திற்கு அடுத்த மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து விதமான பணிகளிலும் கட்சிகள் இறங்கியுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போகும் கட்சி தேர்தெடுக்கப்படுவதால் போட்டிகள் அதிகமான உள்ளது. தமிழகத்தில் தற்போது அரசியல் சூழல் மந்தமான நிலையில் தான் உள்ளது. ஏனெனில், கட்சிக்கு மூத்த தலைவர்களாக யாரும் இல்லை.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

Rajinikanth keeps his political party act open-ended yet again - The Federal

அதிமுக கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியிட உள்ளார் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் முன்னணி கட்சியான திமுகவில் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் போட்டியிட உள்ளார். இப்படியான சுழலில் நடிகர்களும் இந்த தேர்தல்களில் போட்டியிட உள்ளனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான “உலகநாயகன்” கமல்ஹாசன் தேர்தலுக்கான பணிகளில் மற்ற கட்சிகளை போல் இறங்கியுள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

அதே போல் தமிழ் திரையுலகின் “சூப்பர்ஸ்டார்” ரஜினிகாந்த் இந்த தேர்தலில் கண்டிப்பாக பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பல ஆண்டுகளாக கட்சி துவங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது வரை கட்சி குறித்த எந்த ஒரு அறிவிப்பினையும் அவர் அதிகாரப்பூர்வமான அறிவிக்கவில்லை.

‘அதிமுக கிளைச் செயலாளர் முதல் முதல்வர் அரியணை வரை’ – எடப்பாடி பழனிசாமியின் வெற்றிப்பயணம்!!

இந்த சட்டமன்ற தேர்தலுக்கு தனது புதிய கட்சியின் பெயர், சின்னம், முதல்வர் வேட்பாளர் போன்றவற்றை அடுத்த ஆண்டு தேர்தலுக்கு 3 மாதத்திற்கு முன்னர் பிப்ரவரி மாதம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின், முழு வீச்சாக கட்சிப் பணிகளில் இறங்குவர் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -