தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இடியுடன் மழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
Rain
Rain

தமிழகத்தில் அவ்வப்போது பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், புதுவையில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

அரசு பணிகளில் இடமாறுதல்கள் நிறுத்தி வைப்பு – பணியாளர் நிர்வாகத்துறை சுற்றறிக்கை!!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பந்தலூர் (நீலகிரி) 5, சின்னக்கல்லார் (கோவை) 4, தேவலா (நீலகிரி), திருவாலங்காடு (திருவள்ளூர்) 3 செமீ மழை பதிவாகி உள்ளது. மேலும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 20ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

இன்று முதல் செப்.21 வரை மன்னார் வளைகுடா பகுதிகளிலும், இன்று அந்தமானிலும் 45-55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here