நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை- உயர்நீதிமன்ற தலைமை அமர்வு!!

0

நீதிமன்றம் குறித்து தவறாக விமர்சித்ததாக நடிகர் சூர்யா மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் கடிதம் எழுதி இருந்த நிலையில், அம்மாதிரியான நடவடிக்கை தேவையில்லை என உயர்நீதிமன்ற தலைமை அமர்வு உத்தரவிட்டு உள்ளது.

சூர்யா கருத்து:

தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தினால் தேர்வுக்கு முந்தைய நாள் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ‘கொரோனாவால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பாரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை மட்டும் அச்சமின்றி தேர்வெழுத உத்தரவிடுகிறது’ என அதிரடியான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது நீதிமன்றத்தின் நேர்மையையும், சிரத்தையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறிய நீதிபதி சுப்ரமணியன், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

மறுபுறம் சூர்யாவின் ரசிகர்கள் #TNStandWithSuriya என்ற ஹேஷ்டேக் உடன் தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும் சூர்யாவிற்கு ஆதரவாக, எதிராக என பல அரசியல் கட்சியினர் களத்தில் குதித்தனர். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என முன்னாள் நீதிபதிகள் 6 பேர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர்.

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இடியுடன் மழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இந்நிலையில் நீதிபதி சுப்ரமணியத்தின் கோரிக்கையை உயர்நீதிமன்ற தலைமை அமர்வு நிராகரித்துள்ளது. மேலும் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை எனவும், பொது விவகாரங்கள் குறித்து கவனமுடன் விமர்சிக்குமாறு நடிகர் சூர்யாவிற்கு அறிவுரை வழங்கி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here