உடல் எடையை எளிமையான முறையில் குறைக்கணுமா?? இதோ சூப்பர் டிப்ஸ்!!

0
Weight-Loss-
Weight-Loss-

இந்த காலத்தில் உள்ள பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை உடல் பருமன் அதிலும் தொப்பை விழுவது தான். ஏனெனில் பிடித்த ஆடைகளை அணிய முடியாது. எனவே தான் சில உணவு முறைகளை கடைபிடித்தால் இந்த தொப்பைகளை 100% கண்டிப்பாக குறைக்கலாம்.

கொள்ளு

உடல் பருமன், ஊளை சதை , தொப்பை போன்றவைக்கு முக்கிய காரணம் மாறி வரும் உணவு பழக்கங்களே. ஒழுங்கான உணவு முறை இல்லாமை, துரித உணவுகளை சாப்பிடுவது போன்றவையே. ஆனால் நாம் நமது பாரம்பரிய உணவுகளை மறந்தே போய்விட்டோம். உடல் பருமன் பிரச்சனைகளை ஆரம்பத்தில் பெரிதாக எண்ணாமல் அப்படியே விட்டுவிடுவதால் அது பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதற்கு கொள்ளு ஒரு முக்கிய தீர்வாக இருக்கும்.

Kollu-paruppu
Kollu-paruppu

கொள்ளு பருப்பை நாம் அதிகமாக பயன்படுத்தி இருக்க மாட்டோம். இன்றைய தலைமுறையினர் சிலர் அதனை பார்த்து கூட இருக்கமாட்டார்கள். ஒரு குதிரையின் வேகம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று ஆனால் அந்த குதிரைக்கு இந்த சக்தி கொள்ளு பருப்பின் மூலம் கிடைத்தது என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம். இப்பொழுது கொள்ளுப்பருப்பின் நன்மைகளை பாப்போம்.

kollu
kollu
  • கொள்ளு பருப்பை ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும். மேலும் உடலில் இருக்கும் ஊளை சதையை குறைக்கும்.
  • கொள்ளு பருப்பை வேகவைத்து அந்த தண்ணீரை பருகி வந்தால் ஜலதோஷம் நீங்கும். இதனால் வயிற்றுப்போக்கு, கண் நோய், போன்றவை சரியாகும்.
  • கொள்ளு பருப்பை சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை போக்கு, மாதவிடாய் பிரச்சனை போன்வை வராமல் தடுக்கும்
  • இந்த கொள்ளு பருப்புடன் அரிசி கலந்து செய்யக் கூடிய கஞ்சியை குடித்தால் எலும்புகளும், நரம்புகளும் வலுப்படும். மேலும் பிரசவ அழுக்கை கூட வெளியேற்றும்.
  • இரவில் கொள்ளு பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரையோ அல்லது பருப்பையோ காலையில் எழுந்ததும் உட்கொண்டால் 1 மாதத்தில் உடல் எடை குறையும். தொப்பையும் போடாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த கொள்ளு பருப்பை சாப்பிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here