Thursday, May 2, 2024

தமிழகம், கேரளா இடையே 7 சிறப்பு ரயில்கள் இயங்கும் – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!!

Must Read

தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி முதல் பயணியர் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து தற்போது மேலும் 7 சிறப்பு ரயில்கள் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் செயல்படும் என்று ரயில்வேத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கம்:

கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தபட்ட பொது முடக்கத்தால் பொது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ரயில்வே சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்ததால் ரயில்கள் இயக்கப்படாமல் இருந்து வந்தது. ஆனால், கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் மாவட்டங்களுக்குள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து தற்போது மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயங்கும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. அதில் 3 சிறப்பு ரயில்கள் தமிழகம் – கேரளா இடையே செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பு ரயில்களும் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இயங்கும் என்று ரயில்வேத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்குள் 4 ரயில் சேவைகளும் கேரளாவிற்கு 3 ரயில் சேவைகளும் வழங்கப்பட உள்ளது.

ரயில்களின் முழு விவரம்:

கேரளாவிற்கு செல்லும் 3 ரயில்கள்:
  • காரைக்கால் முதல் கேரளாவில் உள்ள எர்ணாகுளத்திற்கு இடையே தினமும் இயக்கப்படும். ரயில் எண் 161187. மீண்டும் மறுமார்க்கமாகவும் செயல்படும் அதற்கான ரயில் எண் 161188.
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆலப்புழா இடையே தினந்தோறும் செயல்படும். அதற்கான ரயில் எண் 22639. அதே போல் மறுமார்க்கமாக ஆலப்புழா முதல் சென்னை ரயில் நிலையம் வரை செயல்படும் அதற்கான ரயில் எண் 22640.
  • சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் சேவை 3 ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. 3 ஆம் தேதி இரவு 08.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். இதற்கான ரயில் எண் 06723. அதே போல் மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூர் நிலையத்திற்கு 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ரயில் எண் 06724.
தமிழகத்தில் செயல்பட இருக்கும் ரயில்கள்:
  • சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லலும் சிறப்பு ரயில் எண் 02631. இது 5 ஆம் தேதி காலை 7.50 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் நிலையத்திற்கு 2 ஆம் தேதி காலை 7.45 மணிக்கு புறப்படும். இதற்கான ரயில் எண் 02632.
  • அதே போல் சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து செங்கோட்டைக்கு இடையே தினம்தோறும் செயல்படும். வரும் 3 ஆம் தேதி காலை 8.40 மணிக்கு செங்கோட்டைக்கு புறப்படும். இந்த ரயில் எண் 02661. அதே போல் மறுமார்க்கமாக சென்னைக்கு 4 ஆம் தேதி காலை 6 மணிக்கு புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ரயில் எண் 02662.
chennai egmore
chennai egmore
  • சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து மதுரைக்கு இடையே வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2 ஆம் தேதி முதல் செயல்படும். இந்த ரயில் எண் 02613. அதே போல் மறுமார்க்கமாக மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் நிலையத்திற்கு வரும் 2 ஆம் தேதியில் இருந்து சேவைகள் தொடரும். இந்த ரயில் எண் 02614.
  • சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் 5 ஆம் தேதி மாலை 4.45 மணி முதல் ரயில் சேவைகள் தொடரும். இது தினம்தோறும் செயல்படும். இந்த ரயில் எண் 02205. அதே போல் மறுமார்க்கமாக ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு 2 ஆம் தேதி காலை 7.15 முதல் இயக்கப்படும். இந்த ரயில் எண் 02206.

இவ்வாறாக ரயில்வேத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பான் இந்தியா படமாக உருவாகும் ‘துப்பறிவாளன்-2’.. வெளியான முக்கிய அப்டேட்!!

கடந்த 2018 ம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் தான் துப்பறிவாளன். அதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தை விஷால் தயாரித்து இயக்குனர் மிஷ்கின்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -