சுவையான ‘கோவக்காய் பிரியாணி’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
கோவக்காய் பிரியாணி
கோவக்காய் பிரியாணி

உணவு வகைகளில் பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணிஅனைவரும் மிச்சம் வைக்காமல் ஒரு பிடி பிடிப்பர். முக்கால்வாசி பேருக்கு பிடித்த டிஷ் எது என்று கேட்டால் பிரியாணி என்று தான் கூறுவர். அந்த அளவிற்கு பிரியாணி பிரியர்கள் அதிகரித்துள்ளனர். இப்பொழுது கோவக்காயை வைத்து சுவையான பிரியாணி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

scarlet gourd
scarlet gourd
  • கோவக்காய் – 1/4 கி
  • பட்டை
  • கிராம்பு
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • சோம்பு – 1 தேக்கரண்டி
  • பிரியாணி இலை
  • ஏலக்காய்
  • பச்சை மிளகாய் – 5
  • இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • பிரியாணி அரிசி – 1/2 கிலோ
  • புதினா – ஒரு கை பிடி
  • கொத்தமல்லி – ஒரு கை பிடி
  • பாசிப்பயிறு – 100 கி
  • பட்டாணி – 100 கி
  • மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
  • கறிமசாலா தூள் – 1 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் கோவக்காயை நீளமாக வெட்டி  எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி போன்றவற்றை சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அரிசியை நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும். இப்பொழுது குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சிபூண்டு விழுது, பிரியாணி இலை, சீரகம். சோம்பு, பச்சை மிளகாய் போன்றவற்றை போட்டு வதக்கவும்.

கோவக்காய் பிரியாணி
கோவக்காய் பிரியாணி

அதன்பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதில் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்க்கவும். பின் சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும். இப்பொழுது நாம் நீளமாக நறுக்கி வைத்துள்ள கோவக்காயை அதில் சேர்த்து வதக்கவும். அதன் பின் பச்சை பட்டாணி மற்றும் ஊறவைத்து முளை கட்டி வைத்த பாசிப்பயிறு அதில் சேர்த்து நன்கு வதக்கவும்.

கோவக்காய் பிரியாணி
கோவக்காய் பிரியாணி

பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும். பிறகு நாம் ஊறவைத்துள்ள அரிசியை அதில் சேர்த்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். இப்பொழுது 4 விசில் வந்ததும் இறக்கி பரிமாறினால் சுவையான கோவக்காய் பிரியாணி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here