பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு – அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை!!

0

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகள் கழித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தீர்ப்பினை ஒட்டி அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க அனைத்து மாநிலங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தீர்ப்பின் அம்சங்கள்:

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 2000 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பினை லக்னோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 49 பேரில் 17 பேர் உயிரிழந்து விட்ட நிலையில் மீதமுள்ள 32 பேர் ஆஜராகினர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

  • பாபர் மசூதி இடிக்கப்பட்டது திட்டமிட்டு நடந்த சம்பவம் அல்ல. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரம் இல்லை.
  • பாபர் மசூதியை இடிக்க முன்கூட்டியே சதித் திட்டம் தீட்டப்படவில்லை. பாபர் மசூதியை இடிக்க முயன்ற கயவர்களை குற்றம் சாட்டப்பட்டோர் தடுத்தனர்
  • இதனால் முன்னாள் துணை பிரதமர் அத்வானி, முதல்வர்கள் உமா பாரதி, கல்யாண் சிங், தற்போதைய 3 பாஜக எம்பி.,க்கள் உட்பட 32 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here