இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு உத்தரவு!!

0
puducherry lockdown
puducherry lockdown

நிவர் புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ள நிலையில், புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய காரணங்கள் இன்றி வெளியில் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஊரடங்கு உத்தரவு:

கொரோனா பரவல் தாக்கமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக நிவர் புயல் உருவாகி உள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் தற்போது வலுப்பெற்று மாலை நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் புயல் சூறாவளி காற்றுடன் 100 கிமீ வேகத்தில் கடக்கும் என்பதால் 8ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் ஏற்கனவே பள்ளிகளுக்கு இன்று முதல் மறுஉத்தரவு வரும் வரை விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் இன்று மாலை முதல் தொழிற்சாலைகளை மூடவும் முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டு உள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் 26ம் தேதி காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here