Saturday, May 4, 2024

இந்தியாவில் மீண்டும் பப்ஜி – புதிய அப்டேட்களுடன் மாஸாக களமிறங்குகிறது!!

Must Read

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள பப்ஜி மீண்டும் புதிய திருப்பங்களுடன் வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது சீனாவின் தயாரிப்பு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இளைஞர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

மீண்டும் பப்ஜி:

சமீபத்தில் சீனா & இந்தியாவின் இடையே நடந்த எல்லை சண்டைகளால், சீன தயாரிப்புகளை இந்தியாவில் தடை செய்தனர். அதில், பப்ஜி உட்பட 117 பிற சீன பயன்பாடுகளை சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசு தடை செய்தது. பெரும்பாலான ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து எடுக்கப்பட்டது. இந்திய தடை செய்த ஆன்லைன் விளையாட்டான பப்ஜி மிகவும் பிரபலமானது. இதனால் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் சோகத்திற்கு ஆளானார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இப்போது தென் கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன் இந்தியாவில் பப்ஜி விளையாட்டை புதிய மாற்றங்களுடன் மீண்டும் கொண்டுவர போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது பப்ஜி செயலியை, ‘பப்ஜி மொபைல் இந்தியா’ என்ற பெயரில் மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவதாக பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்பு இருந்த பப்ஜியில், வீரர்கள் அரை நிர்வாணத்துடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இது இந்திய கலாச்சாரத்தை கெடுக்கும் வகையில் இருந்தது மற்றும் இளைஞர்கள் அதிக நேரம் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி இருப்பதாகவும் புகார்கள் வந்துள்ளது. இதனால் தற்போது வெளியிடப்படவுள்ள ‘பப்ஜி மொபைல் இந்தியா’ செயலியில் வீர்ர்கள் முழு ஆடையுடன் இருப்பது, ரத்தம் சிகப்பு நிறத்திற்கு பதிலாக பச்சை நிறத்தில் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போல இளைஞர்கள் நீண்ட நேரம் விளையாடாமல் இருக்க நேர கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த புதிய வெர்சென் எப்போது வெளிவரும் என்ற தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் இளைஞர்களிடையே பப்ஜி எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முழுக்க முழுக்க தென் கொரியாவின் உள்ள பப்ஜி கார்ப்பரேஷன் இதனை கையாளும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் இந்த பப்ஜி விளையாட்டை 50 மில்லியனுக்கு அதிகமானோர் விளையாண்டு கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்., மே 20ஆம் தேதிக்கு பிறகுதான்? சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பு!!!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும் பொதுத்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -