‘ஜோ பைடனை வெள்ளை மாளிகைக்குள் விட மாட்டேன்’ – டிரம்ப் அதிரடி பேட்டி!!

0
In this July 17, 2019, photo, President Donald Trump arrives to speak at a campaign rally at Williams Arena in Greenville, N.C. (AP Photo/Carolyn Kaster)

அமெரிக்கா நாட்டில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலின் முடிவுகளை தற்போதைய அதிபர் டிரம்ப் தொடக்கத்தில் இருந்தே இதனை எதிர்த்து வந்தார். தற்போது டிரம்ப் புதிதாக ஓர் அறிவிப்பை வெரளியிட்டுள்ளார். ஜோ பைடன் அதிபராக பதிவு ஏற்க அனுமதிப்பது போல் தெரிவதில்லை.

டொனால்ட் டிரம்ப்:

தற்போது அமெரிக்கா நாட்டில் அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்து வருகிறார். விரைவில் அதிபருக்கான கால அவகாசம் முடிவடைய உள்ளது. மேலும் இதற்கான தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி அன்று நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகளும் வெளிவந்தது. அதில் அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார் என்று அறிவித்தனர். இந்த முடிவிற்கு ஆரம்ப காலத்தில் இருந்தே டிரம்ப் தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தேர்தலில் முறைகேடு நடந்தாக டிரம்ப் குற்றம் சாட்டினார். மேலும் இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரை மாகாண நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. உச்ச நீதி மன்றமும் டிரம்பின் மனுவை நிராகரித்தது. அதன்பின் எஸ்ட்ரோல் காலேஜ் எனப்படும் மாகாண நீதிபதிகள் வாக்களித்து அதிபரை தேர்வு செய்தனர். அதன் முடிவுகளில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். மேலும் இதனை உறுதி படுத்துவதற்கு பார்லிமென்டில் கூட்டுக்கூட்டம் நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன தொழிலதிபர் ஜாக் மா கைது – பத்திரிகை நிறுவனங்கள் தகவல்!!

ஜார்ஜியா மாகாணத்தில் செனட் எம்.பிக்கான தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ‘அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்றும் அதிபர் பதவியை விடமாட்டேன் என்றும் கூறினார். மேலும் அனைத்து வகையிலும் போராடுவேன். எலக்டோரல் காலேஜ் ஓட்டளித்து விட்டால், பைடன் வென்றதாக ஆகிவிடுமா?? அவரை வெள்ளை மாளிகைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார்.

பார்லி,யின் கூட்டு கூட்டத்தில், அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என குடியரசு கட்சியினர் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் கூட்டத்தில் எடுக்கப்படும் தேர்தல் முடிவுகளை எதிர்க்கவும், விசாரணைக்குழு அமைக்க உத்தரவு விட வேண்டும் என்று டிரம்ப் மற்றும் அவரது ஆதரவான எம்.எல்.ஏகள் முடிவு செய்துள்ளனர். மேலும் அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் இதனை எதிர்த்து வருவது போல் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here