தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது – மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

0
bird flu in india
bird flu in india

கேரளா, ராஜஸ்தான் மற்றும் சில மாநிலங்களில் பரவி வரும் பறவை காய்ச்சல் தற்போது தமிழகத்தில் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தடுக்க தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறவை காய்ச்சல்:

கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதிலும், குறிப்பாக கேரளா மாநிலத்தில் உள்ள ஆலப்புழா போன்ற பகுதிகளில் அதிவேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே, கொரோனா வைரஸின் புதிய வகை வேகமாக பரவி வரும் நிலையில், பறவை காய்ச்சலும் பரவி மக்களை அச்சப்படுத்தி வருகின்றது.

‘ஜோ பைடனை வெள்ளை மாளிகைக்குள் விட மாட்டேன்’ – டிரம்ப் அதிரடி பேட்டி!!

இந்த பறவை காய்ச்சல் பரவல் காரணமாக கேரளாவில் 12 ஆயிரம் வாத்துகள் இறந்துள்ளன. இதனால் அங்கு மக்கள் பீதி அடைந்துள்ளனர். இப்படியாக நிலை இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தி உள்ளது. மேலும், இந்த பாதிப்பு மற்ற மாநிலங்களில் பாதிப்பினை ஏற்படுத்திவிட கூடாது என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Kenya, Rwanda ban Uganda poultry after bird flu outbreak | Africa | DW | 17.01.2017

குறிப்பாக, தமிழகம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பரவுவதற்கான அறிகுறிகள் உள்ளது என்றும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் வெறும் காய்ச்சல் மற்றும் உடல் வலியாக தான் பறவை காய்ச்சல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here