சீன தொழிலதிபர் ஜாக் மா கைது – பத்திரிகை நிறுவனங்கள் தகவல்!!

0

சீன தொழிலதிபரான ஜாக் மா சீன அரசால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் யாருக்கும் தெரியாமல் வீட்டு காவல் அல்லது சிறையில் அடைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் சீன பத்திரிகை நிறுவனங்கள் தகவல் அளித்துள்ளது.

ஜாக் மா:

சீனா நாட்டில் தொழில் முனைவர் தான் ஜாக் மா. இவர் சீன நாட்டில் புகழ்பெற்ற இணையவழி வணிகத்தின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவராக விளங்கி வருகிறார். ஃபோர்ப்ஸ் என்னும் இதழின் முகப்பு பக்கத்தில் இடம் பிடித்த முதல் சீன நாட்டவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. மேலும் இவர் சீன நாட்டின் நம்பர் 1 பணக்காரராக திகழ்கிறார். அரசு வங்கி மற்றும் நிதித்துறை கட்டுப்பாடுகளின் செயல்பாடுகளை குறித்து ஜாக் மா கடுமையாக விமர்சித்தார். இதனால் சீன அரசின் கோவத்திற்கு ஆளான இவர் கடும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அலிபாபா நிறுவனங்களில் சட்டமீறல் நடந்ததாக குற்றம்சாட்டி அபராதம் விதித்துள்ளது. மேலும் ஜாக் மா வெளிநாடு செல்வதற்கு சீன அரசு தடை விதித்துள்ளது. மேலும் 2 கடந்த மாத காலங்களாக ஜாக் மா எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. கடந்த 2 மாதங்களாக இவர் மாயமாகியுள்ளார். தற்போது இதனை குறித்து சீன நாட்டின் பத்திரிகைகள் சில அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சித்ராவின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றம் – காவல் ஆணையம் உத்தரவு!!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின், ‘பீப்பிள்ஸ் டெய்லி’ பத்திரிகை, ஜாக் மா, கண்காணிப்பு வளையத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. சீன அரசு சமூகத்தில் மதிப்புமிக்கவர்களை கைது செய்தால் மக்கள் யாருக்கும் தெரியாமல் கண்காணிப்பு வளையத்தில் வைத்து விசாரணை நடத்துவார்கள் அல்லது சிறையில் வைத்து விசாரணை நடத்தி வருவார்கள் என்று கூறியதுள்ளது. மேலும் ஜாக் மாவை குதிரை மாமா என்று மக்கள் அழைத்து வந்தனர். ஆனால் தற்போது மக்கள் பணத்தை சுரண்டியவர் என்றும் ரத்தம் குடிக்கும் காட்டேரி என்று அழைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here