சித்ராவின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றம் – காவல் ஆணையம் உத்தரவு!!

0

சின்னத்திரை நடிகை சித்ரா கொலை வழக்கில் தொடர்ந்து பல மர்மங்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இது தற்கொலை தான் எனவும் பிரேத பரிசோதனையில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சித்ராவின் தற்கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்ற காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சித்ரா

சின்னத்திரை நடிகை சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். புகழின் உச்சியை தொடும் நேரத்தில் திடீரென தற்கொலை செய்துக்கொண்டார்.இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்ரா தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோழையா?? என பல கேள்விகள் எழுந்தன. அதன் பிறகு அவரது கணவர் ஹேமந்த் மீது பல புகார்கள் போடப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் மக்கள் மத்தியிலும் சித்ரா தற்கொலை தான் செய்துகொண்டார் என்ற சந்தேகம் எழுந்தது. ஹேமந்த்தை போலீசார் விசாரிக்க பல உண்மைகள் தெரிய வந்தது. இதில் விஜய் டிவி பிரபலம ரக்சன் பெயரும் வெளிவந்தது. தொடர்ந்து சித்ராவின் கொலை வழக்கில் பல மர்மங்கள் வெளியானது. இதனால் பலரும் ஆதரிச்சியடைந்தனர். சித்ராவிற்கும் ஹேமந்த்திற்கும் திருமணம் ஆனதால் இந்த வழக்கு ஆர்.டி.ஓ விற்கு மாற்றப்பட்டது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று பிறந்தநாள் – குவியும் வாழ்த்துக்கள்!!

இந்த விசாரணையில் 16 பக்க அறிக்கையை ஆர்.டி.ஓ போலீசாரிடம் ஒப்படைத்திருந்தது. இதை சித்ரா தற்கொலை வழக்கில் வரதட்சணை கொடுமை காரணம் கிடையாது என குறிப்பிட்டிருந்தது. சித்ராவின் அம்மாவும் ஹேமந்த் தான் இதற்கு காரணம் என மன்றாட தான் செய்தார். மேலும் முதலமைச்சருக்கு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்திருந்தார். இந்நிலையில் சித்ராவின் கொலை வழக்கை தற்போது காவல் ஆணையம் மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றியுள்ளது. இனியாவது சித்ரா தற்கொலையில் இருக்கும் உண்மை வெளிப்படுமா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here