நாளுக்கு நாள் உயரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை – கவலையில் வாகன ஓட்டிகள்!!

0

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளுக்கு நாள் மாற்றியமைக்கப்படும். தற்போது இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையில் உள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை:

இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது. காரணம் அனைத்து மக்களிடமும் தற்போது இரு சக்கர அல்லது 4 சக்கரம் வாகனம் இருக்கிறது. மேலும் அதன் பயன்பாடும் அதிகமாக உள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசலின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றி அமைத்து விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் இந்தியன் ஆயில் மற்றும் பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் நாள்தோறும் எரிபொருட்களின் விலையை நிர்ணயிக்கின்றன. மேலும் இவர்கள் நிர்ணயிக்கும் புதிய விலை அன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வரும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் கடந்த ஆண்டு மே மாதம் வரை பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்து வந்தனர். இதனால் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக சரிந்தது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று பிறந்தநாள் – குவியும் வாழ்த்துக்கள்!!

எனவே கடந்த ஆண்டு ஜூன் 7ம் தேதி முதல் வழக்கம்போல் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை மாற்றியமைத்து வந்தனர். தற்போது இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் பெட்ரோல் இன்றைய நிலவரப்படி 24 காசுகள் உயர்ந்து ரூ.84.75 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டீசல் லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து ரூ.79.46 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here