Friday, May 3, 2024

மும்மொழி கொள்கையே பின்பற்றப்பட வேண்டும் – மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு

Must Read

கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட மும்மொழி கொள்கைக்கு எதிர்க்க தமிழாத்தை சேர்ந்த பல கட்சிகளுக்கும் போர்க்கொடி தூக்கி வந்த நிலையில், தற்போது மக்களவையில் அனைத்து மாநிலங்களிலும் மும்மொழி கொள்கை தான் பின்பற்றபடும் என்றும் 3 வது மொழியினை மாநில அரசு தேர்வு செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ளது.

மும்மொழி கொள்கை:

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசு இனி நாடு முழுவதும் மும்மொழி கொள்கை தான் பின்பற்றப்படும் என்று தெரிவித்தது. இதனால் பல கேள்விகளுக்கும் பல சர்ச்சைகளும் எழுந்தன.தமிழகத்தில் தற்போது பின்பற்றபட்டுவரும் கல்வி கொள்கை தான் இனியும் பின்பற்றப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

தமிழகத்தில் இந்த கல்வி கொள்கைக்கு எதிராக கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் கட்சிகள் போராடி வந்தன. இது இந்தி திணிப்பு என்றும் கூறி வந்தனர். இப்படியான நிலையில் இன்று மக்களவை கூட்டத்தில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் இந்த விவகாரம் குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார்.

மத்திய அமைச்சகம் பதில்:

அவரது கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் ஒன்றை அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது “புதிய கல்விக்கொள்கையின் மும்மொழி கொள்கை தான் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்படும்.”

சுவையான ‘Garlic Mushroom’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

nep 2020
nep 2020

“மூன்றாவது மொழியாக எது இருக்க வேண்டும் என்று மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம். அதில் மாணவர்களின் கருத்துக்களையும் கேட்டுக்கொள்ளலாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -