சுவையான ‘Garlic Mushroom’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
mushroom masala recipe
mushroom masala recipe

காளானில் அதிக குணநலன்கள் உள்ளனர். பெரியவர்களும் இதனை உணவில் எடுத்து கொள்ளலாம். நீரிழிவு நோய்க்கு இது மிகவும் ஏற்றது. இது எளிதில் ஜீரணமாகும் உணவு என்பதால் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இது அதிகளவு சுவையுடனும் இருக்கும் அதனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்பொழுது ‘Garlic Mushroom’ எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

mushroom gravy ingredients
mushroom gravy ingredients

காளான் – 250 கிராம்

வரமிளகாய் – 7

பூண்டு – 5 பல்

இஞ்சி – சிறிது

பச்சை மிளகாய் – 2

மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி

வெங்காயம் – 2

பட்டை, கிராம்பு

உப்பு தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிது

செய்முறை

முதலில் வரமிளகாய் மற்றும் பூண்டு இந்த இரண்டையும் உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதன்பின் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை கிராம்பு, இஞ்சி சேர்த்து அதன்பின் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

mushroom recipes in tamil
mushroom recipes in tamil

வதங்கியதும் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்பொழுது நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் காளானை சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.

5 நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கினால் ‘Garlic Mushroom’ தயார். இது தோசை இட்லி மற்றும் சப்பாத்திக்கு அவ்வளவு அருமையாக இருக்கும். ரசம் மற்றும் சாம்பார் சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும். இதை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிச்சமே வைக்க மாட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here