அசத்தலான ‘Malpua Sweet’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
Malpua_with_rose_and_saffron_syrup
Malpua_with_rose_and_saffron_syrup

இனிப்பு வகைகளை குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவர். குலோப் ஜாமுன், பால்கோவா, அல்வா போன்றவைகள் தான் கடைகளிலும் அதிகம் விற்கப்படும். ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிமையாக ஸ்வீட்ஸ் செய்து விடலாம். அந்த வகையில் பாலை வைத்து சூப்பரான ஸ்வீட் எப்படி செய்றதுன்னு பாப்போம் வாங்க.

தேவையான பொருட்கள்

Ingredients
Ingredients

பால் – 1லிட்டர்

சர்க்கரை – 5 தேக்கரண்டி

நெய் – 5 தேக்கரண்டி

மைதா மாவு – 1 தேக்கரண்டி

சோளமாவு – 1 தேக்கரண்டி

ஏலக்காய்

செய்முறை

முதலில் கடாயில் பாலை சேர்த்து அடுப்பை சிறிதாக வைத்து காய்ச்சவும். இப்பொழுது பால் நன்கு சுண்டி வரும். இப்பொழுது கிளறிக்கொண்டே இருங்கள். பால் நன்கு திரண்டு வரும். பாலை இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அடித்துக்கொள்ளவும். அதனை ஒரு பௌலுக்கு மாற்றி அதில் மைதா மாவு மற்றும் சோளமாவு சேர்த்து மாவு பதத்திற்கு கிளறவும்.

milk recipes
milk recipes

அதனை 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். இப்பொழுது சர்க்கரையை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து பாகு செய்துகொள்ளவும். அதன்பின் ஒரு கடாயில் நெய் ஊற்றி பால் கலவையை கரண்டியால் கடாயில் ஊற்றவும். நன்கு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்துக்கொள்ளவும்.

milk recipes
milk recipes

இப்பொழுது அதனை சர்க்கரை பாகுவில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து ஏலக்காய் தூவி பரிமாறினால் சுவையான milk ரெசிபி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here