சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – இன்று பலப்பரீட்சை!!

0

ஐபிஎல் 2020 சீசனின் 3வது போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இதில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும், அதிரடி ஆட்டக்காரர் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோத உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஐபிஎல் 2020:

பல தடைகளை உடைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி உள்ளன. கொரோனா தொற்று காரணமாக வழக்கம் போல் நடத்தப்படும் பிரம்மாண்ட தொடக்க விழா இம்முறை நடைபெறவில்லை. மேலும் கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக போட்டியின் துவக்கத்தில் கரவோசங்கள் எழுப்பி வீரர்கள் உற்சாகப்படுத்தினர். ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளில் சென்னை, டெல்லி அணிகள் வெற்றி பெற்று உள்ளன.

இன்று நடைபெற உள்ள 3வது போட்டியில் இரவு 7.30 மணிக்கு துபாயில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றிராத பெங்களூரு அணி மீது இம்முறை ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அந்த அணியில் கோஹ்லி, டீவில்லியர்ஸ் என பேட்டிங் வரிசை அசுர பலத்துடன் இருந்தாலும், பவுலிங்கில் சொதப்புவதால் வெற்றி பெற முடிவதில்லை. எனவே பவுலிங் பிரிவில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.

மறுபுறம் 3 முறை ஆரஞ்சு தொப்பியை (ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்) வென்ற டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சம பலத்துடன் உள்ளது. எனவே இன்றைய போட்டியில் சிக்சர்களுக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 13 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7 போட்டிகளிலும், பெங்களூரு 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி (கேப்டன்), ஆரோன் பிஞ்ச், ஷபாஸ் அகமது, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், டேல் ஸ்டெய்ன், நவ்தீப் சைனி, பார்த்திவ் படேல் (wk), ஏபி டிவில்லியர்ஸ், குர்கீரத் சிங் மான், சிவம் டியூப், மொயீன் அலி, பவன் நேகி , ஆடம் சம்பா, பவன் தேஷ்பாண்டே, முகமது சிராஜ், தேவ்துத் பாடிக்கல், ஜோஷ் பிலிப், யுஸ்வேந்திர சாஹல், உமேஷ் யாதவ், இசுரு உதனா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (wk), கலீல் அகமது, சந்தீப் சர்மா, விருத்திமான் சாஹா, ஃபேபியன் ஆலன், டி நடராஜன், பசில் தம்பி, சஞ்சய் யாதவ், அபிஷேக் சர்மா, பிரியாம் கார்க், மணீஷ் பாண்டே, விராத் சிங்கே ஷங்கர், அப்துல் சமத், முகமது நபி, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், ஸ்ரீவத் கோஸ்வாமி, சித்தார்த் கவுல், மிட்செல் மார்ஷ், கேன் வில்லியம்சன், ஷாபாஸ் நதீம், பவனகா சந்தீப், பில்லி ஸ்டான்லேக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here