கதிர், முல்லையை பார்த்து பொறாமையில் கொதிக்கும் மீனா – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

0

முல்லையின் வீட்டுக்கு வரும் பார்வதியை அக்கறையாக கவனித்துக்கொள்கிறார் கதிர். இதைக்கண்ட மீனா ஜீவாவிடம், அவன் தன் அம்மாவையும் அப்பாவையும் கண்டு கொள்வதில்லை என சண்டை போடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், இரவு ரூமுக்கு வரும் கதிர் முல்லையிடம் பேசாமல், தூங்க கிளம்புகிறார். ஏன் பேசமாட்ரீங்க என முல்லை கேட்க, உனக்கு தான் என்ன பிடிக்கவேயில்ல என கூறுகிறார் கதிர். கதிரின் அருகில் வந்து படுக்கும் முல்லை, நேற்று சென்செக்ஸ் எடுக்க வந்தாங்க, நீங்க படிக்கவில்லை என மீனா சொன்னதால் தான் நான் அப்படி சொன்னேன்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், நீங்க முன்னேறணும்னு தான் நான் அப்படி சொன்னேன் என்று முல்லை கூறுகிறார். ஜனார்த்தனன் சூப்பர் மார்க்கெட் ஆரம்பிப்பதற்கு என்ன வாங்கி கொடுக்கலாம் என மீனா ஜீவாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். நாம டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஆரம்பிக்க போவது தெரிஞ்சு தான் உங்க அப்பா சூப்பர் மார்க்கெட் ஆரம்பிக்கிறார் என ஜீவா கூறுகிறார்.

பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு எதிரொலி – லாரி வாடகை கட்டணம் உயர்வு!!

காலை விடிந்ததும் பயங்கர அலப்பறைகளை செய்துவிட்டு காலேஜூக்கு கிளம்புகிறார் கண்ணன். கதிர் அண்ணனின் வண்டியை மனுஷன் ஓட்டுவானா என கண்ணன் கூறும்போது முல்லையின் முகம் மாறுகிறது. முல்லையின் அம்மா பார்வதி முல்லையை பார்க்க வீட்டுக்கு வருகிறார்.

நடந்தா வந்தீங்க, என்கிட்ட சொல்லியிருந்தால் நானே கூட்டிட்டு வந்திருப்பேனே அத்தை என விசாரிக்கிறார் கதிர். கதிருக்காக செய்து வந்த சர்க்கரை பொங்கலை தனத்திடம் கொடுக்கிறார் பார்வதி. இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த மீனா, ஜீவா அவள் அப்பா, அம்மாவை கவனிக்கவில்லை என குற்றம் கூறுகிறார்.

பார்வதியின் பிரச்சனையை மீனாவிடம் ஜீவா கூற மீனா வருத்தப்படுகிறார். இதை யாரிடமும் சொல்லவேண்டாம் என கேட்டுக்கொள்கிறார் ஜீவா. பின்பு மீனாவின் அம்மா மீனாவுக்கு போன் செய்து குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வர சொல்லி கூப்பிடுகிறார்.

ஜீவா யாரிடமும் கூறவேண்டாம் என்று சொல்லிய, முல்லையின் அம்மாவுக்கு உள்ள பிரச்சனையை தன் அம்மாவிடம் கூறுகிறார் மீனா. இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here