யுவராஜ் சிங்க் சாதனையை சமன் செய்த பொல்லார்ட் – குவியும் வாழ்த்துக்கள்!!

0

இந்திய அணியின் இடதுகை பேட்ஸ்மேனான யுவராஜ் சிங்க் சாதனையை தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்ட் சமன் செய்துள்ளார். தற்போது இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமாக உள்ளது.

பொல்லார்ட்:

இவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன். இவர் பேட்டிங் பௌலிங் என இரண்டிலும் கலக்கி வருபவர். இவர் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் அந்த அணியின் மிக முக்கியமானவராக திகழ்ந்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றுவதற்கு பலமுறை மிக முக்கிய காரணாமாக இருந்துள்ளார். தற்போது வெஸ்ட் இண்டிஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி டி 20 தொடரை விளையாடி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த இரு அணிகளுக்குமான முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் பொல்லார்ட், யுவராஜ் சிங்க் சாதனையை சமன் செய்துள்ளார். யுவராஜ் சிங்க் கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து அரங்கத்தையே அதிரவைத்தார். மேலும் இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். தற்போது இந்த சாதனையை நேற்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் சமன் செய்துள்ளார். நேற்றைய போட்டியில் பொல்லார்ட் இலங்கை அணியின் தன்ஞ்சயா வீசிய ஓவர்களில் 6 பந்தில் 6 சிக்ஸர் அடித்து அசத்தினார்.

#INDvsENG 4 வது டெஸ்ட் – 3 விக்கெட்டை இழந்த இங்கிலாந்து!!

இதன் மூலம் இவர் தற்போது யுவராஜ் சிங்க் சாதனையை சமன் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் தன்ஞ்சயா ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஒரே போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் ஹாட்ரிக் விக்கெட் நிகழ்வது இதுவே முதன்முறை. தற்போது இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமாக இருந்து வருகிறது. நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here