#INDvsENG 4 வது டெஸ்ட் முதல் நாள் ஆட்ட நேர முடிவு – இந்திய அணி 24 – 1!!

1

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது தங்களது நான்காவது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இந்த போட்டி அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி நான்கு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. ஏற்கனவே மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கோப்பையை கைப்பற்றுவது எந்த அணி என்பதை நிர்ணயிக்கும் போட்டி தான் இது. இந்த போட்டி தற்போது அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

யுவராஜ் சிங்க் சாதனையை சமன் செய்த பொல்லார்ட் – குவியும் வாழ்த்துக்கள்!!

தற்போது இங்கிலாந்து அணி தரப்பில் துவக்க ஆட்டக்காரர்களாக சிப்லே மற்றும் கிராவிலே களம் இறங்கினர். இருவரும் துவக்கத்தில் இருந்தே பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் சிப்லே 2, கிராவிலே 5, லாரன்ஸ் 46, பெஸ் 3 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் சுழலில் சிக்கினர். இவர்களை தொடந்து இங்கிலாந்து கேப்டன் ரூட் 5, பேரிஸ்டோ 28 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் வீழ்ந்தனர்.

#INDvsENG 4 வது டெஸ்ட் – கோஹ்லி மற்றும் ஸ்டோக்ஸ் இடையே வாக்குவாதம்!!

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோக்ஸ் 55 ரன்கள் எடுத்த நிலையில் சுந்தரிடம் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து அஸ்வின் சுழலில் போப் 29, ஃபோக்ஸ் 1, லீச் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். தற்போது முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்திய அணி தரப்பில் அக்சர் 4, அஸ்வின் 3 மற்றும் சிராஜ் 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். அதன்பின்பு தனது முதல் இன்னிங்சை இந்திய அணி துவக்கியது. துவக்கத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க ஆட்டக்காரர் கில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். இவர் ஆண்டர்சன் பந்தில் வீழ்ந்தார். தற்போது முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்தியா அணி 24 ரன்கள் எடுத்து தனது 1 விக்கெட்டை இழந்துள்ளது. மேலும் இந்திய அணி தற்போது 181 ரன்கள் பின்தங்கி உள்ளது. தற்போது களத்தில் ரோஹித் மற்றும் புஜாரா ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

லைவ் ஸ்கோர்:

இந்தியா – 24/1

ரோஹித் – 8*
புஜாரா – 15*

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here