இந்தியாவிலேயே மக்கள் வாழ சிறந்த நகரமாக சென்னைக்கு நான்காம் இடம் – ஆய்வறிக்கை வெளியீடு!!

0

இந்தியாவிலேயே மக்கள் வாழ்வதற்கு சிறந்த நகரம் எது என்று நடத்தப்பட்ட ஆய்வில் பெங்களூர் நகரம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில், சென்னைக்கு நான்காம் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் வாழ சிறந்த நகரம்

நாட்டிலேயே மக்கள் வாழ்வதற்கு சிறந்த நகரம் எது என்று கண்டறிய ஆண்டு தோறும் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அதில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ், மக்கள் வாழ்வதற்கான சிறந்த இடங்களை கண்டறியும் ஆய்வை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் நடத்துகிறது. தமிழகத்திலிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாநகராட்சிகள் இந்த ஆய்வில் இடம்பெற்றிருந்தன. இந்த ஆய்வுக்கு நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் மக்கள் கருத்து தெரிவித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா பரவல் எதிரொலி – ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை!!

இந்த ஆய்வின் முடிவை மத்திய மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி மக்களின் வாழ்க்கை திறன், சுகாதார மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நகரங்களுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான பட்டியலை மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் எச்.எஸ்.பூரி வெளியிட்டுள்ளார். இதில் கர்நாடகாவை சேர்ந்த பெங்களூர் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து சென்னை மாநகரம் நான்காவது இடத்திலும், கோவை 7வது இடத்திலும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here