கொரோனா பரவல் எதிரொலி – ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை!!

0

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியை காண்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை என்று ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக்:

ஆண்டு தோறும் அனைத்து உலக நாடு ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கும் போட்டி தான் ஒலிம்பிக். இதில் பல விளையாட்டு போட்டிகள் நடைபெறும். மேலும் போட்டியின் போது அரங்கமே நிரம்பி வழியும் வகையில் ரசிகர்கள் கூட்டம் இருக்கும். மேலும் வீரர்கள் அனைவருக்கும் ரசிகர்கள் தக்க ஊக்கத்தை அளித்து வருவார்கள். தற்போது கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்தானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் அனைத்து பகுதிகளிலும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த ஆண்டு கொரோனாவால் தடை செய்யப்பட்ட ஒலிம்பிக் போட்டியை இந்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரை நடத்த திட்டமிட்டனர். ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கத்தில் இருந்து எந்த நாடும் முழுவதுமாக மீளவில்லை. இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு வெளிநாட்டு ரசிகர்களை தடை செய்துள்ளனர்.

#INDvsENG 4 வது டெஸ்ட் – முதல் இன்னிங்சில் 205 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன இங்கிலாந்து!!

இதனை ஜப்பான் அரசாங்க அதிகாரி கூறியதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கொரோனா காலத்தில் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டியை நடத்தலாமா, நடத்த வேண்டாமா என்று மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தினர். அதில் 58 சதவீத மக்கள் போட்டியை நடத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here