எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திற்கு இடைக்கால தடை நீக்கம் – ஐகோர்ட் அறிவிப்பு!!

0

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இப்படம் வெளியாவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உயர் நீதி மன்றம் அனுமதி கொடுத்துள்ளது.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்கு அனுமதி

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இப்படம் வெளியாவதற்கு இடைக்கால தடை விதிக்க கோரி ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தது. அந்த புகார் மனுவில் எஸ்க்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம், ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்காக 2 கோடியே 42 லட்சம் கடன் வாங்கியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த படத்தின் வெளியீட்டிற்கு பின்னால் 1 கோடியே 75 லட்சம் ரூபாயை அந்த நிறுவனம் திருப்பி கொடுத்து விட்டது. மீதியுள்ள 1 கோடியே 24 லட்சம் பணத்தை கொடுக்காமல் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட முடிவு செய்துள்ளது. எனவே மீதமுள்ள பணத்தை வட்டியுடன் செலுத்தும் வரை பணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

‘தளபதி 65’ நடிகைக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

இந்நிலையில் எஸ்க்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் விஜயன் சுப்பிரமணியன், ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்திற்கு ரூ.60 லட்சம் கொடுத்துவிட்டோம். மீதமுள்ள 82 லட்சத்து 34,846 பணத்தை ஜூலை 31ம் தேதிக்குள் வட்டியுடன் தந்துவிடுகிறோம் என்று கூறி மனு ஒன்றை தாக்கல் செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, படத்தை வெளியிட விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here