‘தளபதி 65’ நடிகைக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

0

நடிகர் விஜய் நடிக்கவுள்ள பெயரிடப்படாத படத்தில் நடிகையாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்கு அவருக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை பூஜா ஹெக்டே

நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் 50ஆவது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முன்னதாக நடிகர் விஜய் நடிக்கவுள்ள 65வது படத்தின் அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. தளபதி 65 என்று அழைக்கப்படும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படத்தை பிரபல வெற்றிப்பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கான அப்டேட்கள் தினமும் வெளிவந்தவாறு இருக்கின்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிகை பூஜா ஹெக்டேயின் சம்பள விவரம் வெளியாகி அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது.

17 வயது மகளின் தலையை வெட்டி கொலை செய்த தந்தை – உ.பி.,யில் பயங்கரம்!!

இப்படத்தில் நடிக்கும் பூஜாவுக்கு 3.5 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படவுள்ளது. முன்னதாக நடிகை பூஜா ஹெக்டே இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ‘முகமூடி’ என்ற திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்துள்ளார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பின்னாக, தமிழில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே தளபதி விஜய்யுடன் ஜோடி போட உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here