14 வது ஐபிஎல் தொடர் – மைதானம் குறித்து ஆட்சிமன்ற குழுவில் முடிவு!!

0

இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான போட்டியை எந்த பகுதி மைதானத்தில் நடத்தலாம் என்பது குறித்து ஆட்சிமன்ற குழுவில் முடிவெடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்:

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் ஐக்கிய அரபில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினர். தற்போது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் 8 முதல் 12ம் தேதிக்குள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொடர் ஜூன் முதல் வாரத்தில் முடிக்கப்படும் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரை மும்பை மைதானத்தில் மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு பிசிசிஐ செவிசாய்க்கவில்லை. தற்போது இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி கருத்து தெரிவித்துள்ளார்.

#INDvsENG 4 வது டெஸ்ட் – அஷ்வின் அசத்தல் பவுலிங்! 7 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து தடுமாற்றம்!!

அவர் கூறியதாவது, ஐபிஎல் போட்டிக்கான இடங்கள் குறித்து மாநில அரசிடம் முதலில் கிரிக்கெட் வாரியம் உத்தரவாதம் அளிக்க வேண்டும். யுகங்கள் எழுப்பப்படாமல் எந்த இடங்களில் போட்டி நடைபெரும் என்பதை உறுதியாக கூற வேண்டும். மேலும் இதுகுறித்த இறுதி முடிவுகளை ஐபிஎல் ஆட்சிமன்ற குழுவில் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் மும்பையில் கொரோனாவின் நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அதன் அம்சங்களை ஆட்சிமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here