பாரிஸ் ஒலிம்பிக் 2024: இந்திய டேபிள் டென்னிஸ் அணி அறிவிப்பு.. யார் யாருக்கு இடம்??

0

4 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும், ஒலிம்பிக் தொடரின் அடுத்த பதிப்பானது நடப்பாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரானது, வரும் ஜூலை 24ம் தேதி முதல், ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற இருப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 206 நாடுகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தியா பதக்க எண்ணிக்கையும் உயரும் என எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன.  இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆறு பேர் கொண்ட டேபிள் டென்னிஸ் அணியை இந்தியா அறிவித்துள்ளது. இதில் ஆண்கள் அணிக்கு ஷரத் கமல் கேப்டனாகவும், மகளிர் அணிக்கு மனிகா பத்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

  • டேபிள் டென்னிஸிற்கான இந்திய ஆண்கள் அணி:
  • ஷரத் கமல், ஹர்மீத் தேசாய், மானவ் தக்கர்;  ரிசர்வ் வீரர்: ஜி.சத்தியன்
  • ஆண்கள் ஒற்றையர்:
  • ஷரத் கமல், ஹர்மீத் தேசாய்
  • மகளிர் அணி:
  • மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா காமத்;  ரிசர்வ் வீரர்: அய்ஹிகா முகர்ஜி
  • பெண்கள் ஒற்றையர்:
  • மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா

 Enewz Tamil டெலிக்ராம்

Play Off சுற்றுக்கு செல்ல போகும் 4வது அணி யார்?? நாளை சென்னை – பெங்களூர் மோதல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here